Published On: Thursday, March 08, 2012
ஆர்யா இடத்தில் யார்?


ஆழம் தெரியாமல் காலை விட்டு, கட்டை விரலையும் பறி கொடுத்த கதையாகிவிட்டது அந்த மூன்றெழுத்து நிறுவனத்தின் நிலைமை. என்றாலும் முன் வைத்த காலை முழுசாக இழுத்துக் கொள்ளவும் தயக்கம். இழந்த பணத்தை மீட்பதற்காக அடுத்தடுத்து படங்களை தயாரிக்க முடிவெடுத்திருக்கிறது. மும்பையில் பெரிய ஹிட் அடித்த 'டெல்லி பெல்லி' படத்தை தமிழில் ரீமேக் செய்யவும் முடிவெடுத்தது.
இதற்காக ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம். அவரும் இதோ அதோ என்று இழுத்தடித்துக் கொண்டே இருந்தார். கால்ஷீட் உறுதி என்று நம்பிக் கொண்டிருந்த நிலையில்தான் அந்த திடீர் அஸ்திரத்தை ஏவினார் அவர்.
என்னோட தம்பியும் இப்போ ஹீரோவா நடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்காரு. நீங்க சரின்னா நானும் என் தம்பியுமே இந்த படத்தில் நடிக்கிறோமே என்றாராம். நல்ல நேரத்திலேயே அபஸ்வரம். இதுல புதுசா ஒரு மெட்டு இருக்கு. கேட்கிறீங்களா என்றால்?
காதை பொத்திக் கொண்டு கம்பியை நீட்டிவிட்டது மூன்றெழுத்து. ஆனால் இவர்கள் அடுத்ததாக அப்ரோச் பண்ணியிருக்கிற இடம் இன்னொரு மூன்றெழுத்து நடிகரிடம்தானாம்.
புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரிதான் இருக்கிறது இவர்களின் புது திட்டம் என்று கவலையோடு நோக்குகிறது கோடம்பாக்கம். 'வம்பு' எதுக்குங்க வாத்தியாருங்களா?