Published On: Thursday, March 08, 2012
ஆஸ்காரை விட உயர்ந்த விருது - டாப்ஸி


தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் டாப்ஸி. தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார். டாப்ஸிக்கு பெரிய விருதுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருப்பதாக கிசுகிசு பரவியது.
இது பற்றி டாப்ஸியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- விருது கிடைக்கவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. விருதுகள் தன்னம்பிக்கையை வளர்க்கும் அதற்காக விருது பெறாத நடிகர், நடிகைகள் எல்லோரும் திறமைசாலிகள் அல்ல என்று கூற முடியாது.
எனது நடிப்பை பார்த்து என்னுடைய தாய் பாராட்டினாலே போதும் அது ஆஸ்காரை விட உயர்ந்த விருதாக இருக்கும். விருதுகளை எதிர்பார்த்து நான் ஒரு போதும் நடிக்க மாட்டேன்.