Published On: Sunday, November 20, 2011
வரவு - செலவுத் திட்டம் நாளை முன்வைப்பு
(பஹமுன அஸாம்)
அடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நாளை திங்கட்கிழமை பி.ப. 1.50 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளதோடு அப்பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வரவு-செலவுத் திட்டம் வாசிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்ளுமாறு சபாநாயர் ஷமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு வரவு-செலவுத் திட்டம் விவாதத்துக்கும் எடுத்துக்கொள்ளப்படும் ஒரு மாத காலத்துக்கும் எந்தவொரு அமைச்சருக்கும் நாட்டை விட்டு வெளியேர அனுமதி அளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.