Published On: Sunday, November 20, 2011
ஜெய்க்கும் அஞ்சலிக்கும் காதலா?
இருவரும் "எங்கேயும் எப்போதும்" என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. அதில் நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்த பிறகும் தொடர்பை நீடித்தனர். செல்போனிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பேசினார்கள்.
நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றாக பார்க்க முடிந்தது. இருவரும் நண்பர்களாக பழகுவதாக ஜெய் கூறிவந்தார். ஆனால், இருவரும் காதலிப்பது உறுதி என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதை நிஜமாக்கும் வகையில் இருவரும் மீண்டும் புதுப்பட மொன்றில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இப்படத்தை ஆர்.என்.ஆர். மனோகர் இயக்குகிறார். இவர் "வேலூர் மாவட்டம்" என்ற படத்தை இயக்கியவர். ஜெய்க்கு கதை சொன்னதும் அஞ்சலியை ஜோடியாக்கும்படி அவர்தான் இயக்குனரிடம் நிர்ப்பந்தித்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் நடக்கலாம் என்கின்றனர் நமது ரசிகர்கள்.