Published On: Friday, November 18, 2011
பயணம் கடந்த கனவு
நீண்டதொரு பயணத்தின்
இடைவெளியில் சுயம் பற்றிய
கனவுகளோடு விழிக்கிறேன்
இருள் சூழ்ந்து மரணத்தின்
காலடிச் சத்தம் இடைவிடாது
கேட்கும் பிரம்மைக்குள்
மனது மூழ்கிப்போனது
பத்திரப்படுத்த முடியாத
கனவுகளின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது கோரிக்கையும்
விண்ணப்பமும்
நீளுகிறது இந்த இரயிலை போல
போகுமிடமோ வந்து விட்டது
கனவுகள் மடடுமே தொடர்கிறது
இந்த உலகமும் ரயில்
பயணமும் ஒன்றுதான்
இறுதியில் பயணச்சீட்டுக்கூட
மிஞ்சுவதில்லை.
- முஹம்மத் மஜீஸ்