Published On: Saturday, November 19, 2011
ஜனாதிபதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 66ஆவது பிறந்ததினத்தையிட்டும் 2ஆவது பதவிக்காலத்தின் முதலாவது வருட பூர்த்தியினையுட்டும் அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நீல் த சில்வாவின் பணிப்புரைக்கு அமைவாக அம்பாறை மாவட்ட மட்டத்திலான விசேட துஆப் பிராத்தனையும், முஸ்லீம் சமய அனுஷ்டானமும் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை பத்ர் (ஹிஜ்றா) ஜூம்மா பள்ளி வாசலில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ. ஜப்பார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர்களான் எம்.ரீ.ஏ.கரீம், எம்.எல்.ஏ.மஜீட இணக்க சபையின் தலைவர் எஸ்.எச்.ஏ. றாசீக் உட்பட சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர்பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் மௌலவி ஐ.எல்.எம். மஹ்றூப் அவர்களினால் விசேட துஆப் பிராத்தனையும், மார்க்க செற்பொழிவும் இடம்பெற்றது.