Published On: Saturday, November 19, 2011
சமூர்த்தி சங்கத்தின் 14ஆவது தேசிய மாநாடு
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் 14ஆவது தேசிய பிரதிநிதிகள் மாநாடு நேற்று வெள்ளிக் கிழமை பத்தரமுல்லை சங்க தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் கித்சிறிகமகே தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளரும், மேல்மாகாண சபை உறுப்பினாருமான எஸ்.ஏ.டீ.ஜெகத்குமார, பொருளாளர் எம்.எம். அன்வர் உட்பட நிர்வாகிகள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 400க்கு மேற்பட்ட கிளைச் சங்க தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டபோதிலும் முக்கியமாக இலங்கை சமூர்த்தி அதிகார சபையின் கீழ் கடமையாற்றும் சமூர்த்தி முகாமையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய ஊழியர்களையும் திணைக்கள சேவைக்குள் உழ்வாங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றை ஏற்றுக் கொள்வது தொடர்பாக சகல பிரதிநிதிகளதும் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட்டது.
ஆதனை அடுத்து 2011-2012 வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு இடம் பெற்றது அதன்படி புதிய தலைவராக கித்சிறி கமகே, செயலாளர் நாயகமாக மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.டீ.ஜெகத்குமார, பொருளாளராக எம்.எம். அன்வர், பிரதி தலைவர்களாக விஜித குமார கொடிதுவக்கு, அணில் மஹிந்தசேன, அவர்களும், பிரதி செயலாளராக பியல் மாத்தர ஆராச்சியும், உதவி பொருளாளராக உபுல் சுஜித் பிரேமரத்தினவும், ஏற்பாட்டுக்குழு செயலாளராக டபிள்யு.எச்.ஜோதிரத்னவும், உதவித்தலைவர்களாக உபுல் சுமலசேகர, அனுர புஷ்ப குமார, உதயகுமார பாலசூரிய, இந்திரதாச ஹேவகே, பிரியந்த குசும்சிறி ஆகியோரும் உதவிச் செயலாளர்களாக கே.சிவகுமார், ஏ.பி.வீரசிங்க, காமினிவிக்ரம சூரியாராச்சி, ரீ.எச்.எஸ்.கே.தென்னகோண், கே.ஜி.புத்ததாச ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் இவர்களுடன் ஒவ்வொரு மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களும் இந்நிர்வாகத்தில் அடங்குவர்.மேலும் இந்நிகழ்வில் மரணித்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இழப்பீட்டு காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.