Published On: Saturday, November 19, 2011
O/Lஇல் பௌதீகவியல், இரசாயனவியல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தின் பாடத் தெரிவுகளை இல்லாது செய்யவிருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கல்வி அறிவின் அபிவிருத்தி நோக்கில், கல்வி முறைமையில் சீர்த்திருத்தம் மேற்கொள்வதை பிற்போட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ளதைப் போலவே, தாய்மொழி, கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட ஆறு பாடங்கள் அத்தியாவசிய பாடங்களாக இருக்கும். எனினும், அதற்கு மேலாக தெரிவு செய்யப்படும் பாடங்களில் பொதுவாக மாணவர்கள் இலகுவான பாடங்களை தெரிவு செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த நிலைமைய மாற்றி, தெரிவு முறையை இல்லாது செய்து, பௌதீகவியல், இரசாயனவியல் போன்ற பாடங்கள் சாதாரண தரத்துக்கு கட்டாயப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.