Published On: Thursday, December 29, 2011
கண்டி அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி-தேரர் பேச்சு

கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடாதிபதிகளைச் சந்தித்து கண்டி நகர அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினார். கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹாநாயக்க தேரர்களான அஸ்கிரிய பீடாதிபதி வண. உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் மற்றும் மல்வத்த பீடாதிபதி வண. திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் ஆகியோரைச் சந்தித்து கண்டி வாவியை சுத்தம் செய்து நவீனமயப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் கண்டி நகரை நவீன நகரமாக அபிவிருத்தி செய்யப் போவதாகவும், இதன்மூலம் கண்டி நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். இங்கு தமது கருத்தைத் தெரிவித்த அஸ்கிரிய மஹாநாயக்க தேரர் அரச தரப்போ அல்லது எதிர்த் தரப்பினரோ நல்ல பணிகள் ஏதும் செய்தால் தாம் எப்போதும் அதற்கு ஆசி வழங்குவதாகவும் தெரிவித்தார்.