Published On: Thursday, December 29, 2011
கொழும்பில் மிகக் குளிரான காலநிலை பதிவானது

கொழும்பில் கடந்த 60 ஆண்டுகளில் மிகக் குளிரான காலநிலை நேற்று புதன்கிழமை பதிவானது. கொழும்பு வெப்பநிலை 18.2 பாகை செல்சியஸாக பதிவாகியது. 1951ஆம் ஆண்டுக்குப்பின் கொழும்பு நகரில் பதிவாகிய மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும். இதற்கு அடுத்த மிகக்குறைந்த வெப்பநிலையாக கடந்த இவ்வருடம் ஜனவரி மாதம் 18.8 பாகை செல்சியஸ் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது