Published On: Friday, December 30, 2011
காதலியை கொன்றுவிட்டு பொலிஸ் தானும் தற்கொலை

(புத்தளம் செய்தியாளர், பஹமுன அஸாம்)
புத்தளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் (30) ஒருவர் தனது காதலி என்று கூறப்படும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றதோடு தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை புத்தளம் மதுரங்குளியில் கிவுலதருன வியாபார பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மதுரங்குளியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 21 வயதான கங்கா சஞ்சீவனி என்பவரே உயிரிழந்தார். அத்தோடு 23 வயதான மகேஷ் குமார என்பவரே இச்சம்பவத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டவராவார். இந்த பொலிஸ் அதிகாரி பிற்பகல் 3 மணியளவில் தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காதலியின் வீட்டுக்குப் போயுள்ள பொலிஸ் அதிகாரி, அங்கு தனது காதலியுடன் முரண்பட்டுள்ளார்.
காதலியான அந்த யுவதி கல்வியல் கல்லூரிக்கு தெரிவாகியிருந்ததோடு அவர் எதிர்வரும் 10ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகளுக்காக வேறு பிரதேசத்துக்குச் செல்ல இருந்தார். இதை விரும்பாத காதலன் காதலியை போகவேண்டாம் என்றுள்ளார். இந்த வாக்குவாதத்தால் தான் இச்சம்பவம் நடை பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரனைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.