Published On: Thursday, December 29, 2011
அம்பாறை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு; இரவில் குளிரான காலநிலை

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கரையோரத்தினையும் கடல் காவு கொண்டு வருகின்றது. சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 7 வருடங்கள் பூர்த்தியடையும் நாளில் கடல் கொந்தளிப்பும் கடலரிப்பும் பிரதேச மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.
கடந்த வாரம் பெய்த பலத்த மழையினை தொடர்ந்து சீரான காலநிலை காணப்படுவதோடு இரவில் கூடுதலான குளிர் நிலவுகின்றது. நாளுக்கு நாள் சாய்ந்தமருது, கல்முனைக்குடி, நிந்தவூர் மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் கடவரிப்பு மிகவும் மோசமடைந்து கொண்டு வருகின்றது. காலையில் இருந்த கடல் அரிப்பை விடலும் இரவு இதன் நிலமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடலை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் பீதி காரணமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது உடைந்த கட்டிடங்களின் இடிபாடுகள் சில தற்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினால் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளன. இதனை பார்வையிடுவதற்காக அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்து மக்கள் கல்முனை பிரதேசத்திற்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.



