Published On: Saturday, December 31, 2011
காத்தான்குடியில் அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
(செங்கதிரான்)
இலவசக் கொப்பிகள் விநியோகத்திற்கு காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தை வழங்க மறுத்தமையினால், எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று காத்தான்குடியில் நேற்று நடைபெற்றது. இதற்குக் காரணமாக அரசியல்வாதிக்கும், வழங்க மறுத்த நகர சபைத் தலைவருக்கும் எதிராக நல்லாட்சி மக்கள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பார்ட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
விழா நடைபெறுவதற்கு முற்பதி செய்யப்பட்டிருந்த போதிலும் இறுதிநேரத்தில் மண்டபத்தை வழங்க மறுத்தமையினால் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் உரிய அரசியல்வாதிகளுக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவண்ணம் சென்றனர். வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்குவதற்கு இந்த மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இது நடைபெறாமையினால் இறுதியில், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கடற்கரையிலுள்ள மக்கள் அரங்கில் வைத்து அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.