Published On: Saturday, December 31, 2011
புதிய பரீட்சைகள் ஆணையாளராக டப்ளியு.எம்.எஸ்.ஜே. புஷ்பகுமார பதவியேற்பு
(பஹமுன அஸாம்)
புதிய பரீட்சைகள் ஆணையாளராக டப்ளியு.எம்.எஸ்.ஜே. புஷ்பகுமார நாளை முதலாம் தகதி பதவி ஏற்கவுள்ளார். பரீட்சைகள் ஆணையாளராக கடமையாற்றும் அனுர எதிரிசிங்க இன்று 31ஆம் திகதி ஓய்வுபெறுகிறார். அந்த வெற்றிடத்துக்கே புஷ்பகுமார அவர்கள் நியமிக்கப்படவுள்ளார். பரீட்சை ஆணையாளராக நியமிக்கப்பட முன்னர் அவர் கல்வி வெளியீட்டு ஆணையாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.