Published On: Tuesday, December 27, 2011
12 எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு 42 மில்லியன் அபராதம்

எரிபொருள் நிலையங்களில் சரியான தரத்தில் சரியான அளவில் பெற்றோல் வழங்கப்படுகிறதா என கண்காணிப்பதற்காக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மேற்கொண்ட 439 தேடுதல் நடவடிக்கைகளின்போது 12 எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு அதன்மூலம் 42மில்லியன் ரூபாவை அரசு வருமானமாகப் பெற்றுள்ளது.
இவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு காசோலைக்கு எரிபொருள் வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு ஒருவருட காலத்துக்குள் சரியான முறையில் எரிபொருள் வழங்கப்படாவிட்டால் அவர்களது அனுமதிப்பத்தரிம் ரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.