Published On: Saturday, January 07, 2012
இரு மணித்தியாலயங்களில் தேசிய அடையாள அட்டை

(கலாநெஞ்சன்)
தேசிய அடையாள பெற்றுக்கொள்வதற்கு ஒருநாள் சேவையின் கீழ் எதிர்வரும் மாதத்திலிருந்து இரு மணித்தியாலயத்திற்கு குறைந்த நேரத்திற்குள் அடையாள அட்டை விநியோகிப்பதற்கு முடியுமென்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் விஜேவீர தெரிவித்தார்.
இந்த ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் பணம் ரூபா 500.ஆகும் எதிர்வரும் காலத்தில் ஒருநாள் சேவையில் அடையாள அட்டைக்காக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும்போது டிஜிடல் இலக்கம் விநியோகிக்கப்படும்,
தற்போது இந்தமுறை இல்லாததன் காரணமாக அடையாள அட்டை பெறுநர்கள் நீண்ட நேரம் அங்கு காத்திருக்க வேண்டியுள்ளது. புதிய முறையின் கீழ் டிஜிடல் இலக்கம் வழங்கும் போது விண்ணப்பத்திற்கு ஏற்ப அடையாயள அட்டை தயாரிப்பதற்கு ஆயத்தமாகலாம். இதற்காக ஆகக்கூடியது இரண்டு மணித்தியாலம் எடுக்கும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.