Published On: Saturday, January 07, 2012
நாட்டின் பல பாகங்களில் மூடுபனி, கடுங்குளிர்
பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்கள் தொடரும் என காலநிலை அவதான நிலையம் கூறியது. காலை வேளைகளில் மழையுடன் பனி மூட்டம் காணப்படும் எனவும் நுவரெலியா மற்றும் மலையக பகுதிகளில் முழுநாளும் பனிமூட்டம் காணப்படலாம் எனவும் அவதான நிலையம் மேலும் தெரிவித்தது. தெற்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடை மழை எதிர்பார்ப்பதாகவும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
தற்பொழுது வட, கிழக்கு பருவப் பெயர்ச்சி மழை பெய்து வருகிற போதும் ‘தானே' சூறாவளியுடன் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக மாலை வேளையில் மழை பெய்வதோடு பனிமூட்டமும் ஏற்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது. பனிமூட்டம் கூடிக் குறையலாம் எனவும் அவதான நிலையம் கூறியது. பனிமூட்டம் காரணமாக காலை வேளையில் கடும் குளிர் காணப்படுவதோடு நுவரெலியா மற்றும் மலையகத்தில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.