Published On: Monday, January 23, 2012
நாளாந்தம் 20 LK டொமைன் இணையத்தளங்கள் பதிவு செய்யப்படுகின்றன

எல்.கே. டொமைன் (.lk) பெயரில் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. நாளாந்தம் குறைந்தபட்சம் 20 இணையத்தளங்கள் புதிதாக பதிவு செய்யப்படுவதாகவும் இதற்கான கேள்வி அதிகரித்துச் செல்வதாகவும் எல்.கே .டொமைன் பதிவாளர் பேராசிரியர் கிஹாண் டயஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.