Published On: Monday, January 23, 2012
அப்துல் கலாம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கை வந்துள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேற்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி, பைசல் காசிம், முத்தலிப் பாவா பாரூக், எஸ்.எம்.அஸ்லம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.தௌபீக், கல்முனை மாநகர பிரதி முதல்வர் நிசாம் காரியப்பர் ஆகியேர்ரும் அமைச்சர் திஸ்ஸ விதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா அகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் பின்னர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்தரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்; "இந்திய முன்னாள் ஜனாதிபதியான கலாநிதி அப்துல் கலாம் கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்ற சில முன்னேற்றகரமான தகவல்களை தெரிவித்தார்.
அவருடைய அனுபவத்திலிருந்து குறிப்பாக ஒவ்வொரு நாடும் மின்சாரத்தை பெறுவதற்கான வெவ்வேறு வழிகளில் செயற்படும் குறித்த விடயத்தில் ஒவ்வொரு நாடும் எவ்வளவு தூரம் மின்வழுவை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்.
கிராமப்புறங்களை கூட்டிணைந்து ஒன்றுபடுத்தும் முயற்சியில் குறிப்பாக இலங்கையைப் பொறுத்தவரை நாற்பதாயிரம் கிராமங்கள் காணப்படுவதாகவும் அவற்றை மிக வேகமாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக அரசியல்வாதிகள் அபிவிருத்;தி அரசியல் என்ற விடயத்தில் கூடுதல் முன்னேற்றம் செலுத்த வேண்டும்.
மாமுல் அரசியல் என்பது முப்பது சதவீதத்திலிருந்து அபிவிருத்தி சம்பந்தமான அரசியலில் எழுபது சத வீதமான அபிவிருத்தியில் கவனம் செலுத்துமாறும் தன்னைப் பொறுத்த மட்டில் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு உகந்தவழிமுறையாகும் என்பதனையும் ஏற்கனவே இந்த நாட்டில் செயற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி செலவினங்களுக்கு கிராம மக்களை ஒன்றிணைக்கின்ற சில வித்தியாசமான சக்திகளை அவர் எங்களோடு பகிந்து கொண்டார்" என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.