Published On: Friday, January 06, 2012
சம்மாந்துறையில் மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
அண்மையில் பெய்தமழை வெள்ளத்தை அடுத்து சம்மாந்துறைப் பிரதேசத்தில் 12 டெங்கு நோயாளர்கள் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையிலிருந்து இனங்காணப்பட்டதை அடுத்து, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை பொலிஸ் சூழல் பாதுகாப்பு பிரிவு, பிரதேசசபை என்பன இணைந்து நேற்று வியாழக்கிழமை மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர் எஸ்.எப்.இஸ்ஸானா, டாக்டர் திலானி தயரத்ன,தலைமை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக், சூழல் பாதுகாப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.நிஸார் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசேதகர்கள் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வூட்டல் செய்ததுடன் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.


