Published On: Monday, January 30, 2012
வெற்றியை கொண்டாட நேரம் இல்லை- பிரியங்கா

ஹிந்தியில் நடிகர் ஹிர்த்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் அக்னிபத்.
இத்திரைப்படத்தி்ல் காலி கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்துள்ளார்.மேலும் இத்திரைப்படம் எதிர்ப்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றியை தந்துள்ளது.
பிரியங்கா தற்போது ரன்பீர் கபூருடன் பார்பி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருவதால் அக்னிபத் திரைப்படத்தின் வெற்றியைக் கூட அவரால் கொண்டாட இயலவில்லை.
இது குறித்து பிரியங்கா கூறுகையில், அக்னிபத் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட முடியாதது எனக்கு வருத்தமளிக்கிறது.
ஆனால் இப்படம் வெற்றியடைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.