Published On: Monday, January 30, 2012
'எரியும் தணல்' படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

பாலா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் எரியும் தணல் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் அதர்வா, நடிகை வேதிகா ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் எரியும் தணல்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.இரண்டாம் கட்ட படப்பிடிப்பை குன்னூரில் நடத்த இயக்குனர் பாலா முடிவு செய்திருந்தார்.
தற்போது பெப்ஸி நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் கருத்து வேறுபாடு நடந்து வருவதால், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை பாலா தள்ளி வைத்துள்ளார்.
இப்படம் ஓர் மலையாள நாவல் கதையை தழுவியுள்ளது, மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.