Published On: Thursday, January 12, 2012
டெங்கு அறிகுறியினால் காத்தான்குடி பாடசாலை மூடப்பட்டது
காத்தான்குடி அல்-அமீன் மகளிர் வித்தியாலயத்தில் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக மாவட்ட சுகாதார பணிமனையின் பணிப்பின் பேரில் இன்று காலை மறுஅறிவித்தல் வரை பாடசாலை மூடப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வண்ணம் சகல பாடசாலைகளும் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் தலைமையில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக இன்று காலை காத்தான்குடி அல்-அமீன் மகளிர் வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது பெருமளவான நுளம்புகள் மற்றும் நுளம்புக் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு பாடசாலையை விட்டு மாணவர்களை வெளியேற்றி மறுஅறிவித்தல் வரை பாடசாலையை மூடுமாறும் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் பாடசாலை அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இப்பரிசோதனை நடவடிக்கையில் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எம். சதுர்முகம் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நசிர்தீன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட் பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.