Published On: Thursday, January 12, 2012
துவிச்சக்கர வண்டியில் வந்தவருக்கு மரணத்தை ஏற்படுத்திய சாரதிக்கு அபராதம்

(கலாநெஞ்சன்)
பாதுகாப்பற்ற விதத்தில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தி சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபர் மீது மோதி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட வாகன சாரதிக்கு நிர்கொழும்பு மேலதிக நீதவான் எட்டாயிரம் ரூபா அபராதம் விதித்தார்.
மொரட்டுவ கடோலான வீதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே இந்த அபராத தொகை விதிக்கப்பட்டது. 2010 ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நீர்கொழும்பில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் நீர்கொழும்பு சாந்த வீதியை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவர் மரணமாகியிருந்தார்.