Published On: Wednesday, January 18, 2012
நண்பனின் 'அஸ்கு லஸ்கா' பாடல் இரகசியம்

அஸ்கு லஸ்கா பாடல் பதினாறு மொழிகளில் காதலை சொல்லிய பாடல் இப்படத்தின் முக்கியமான பாடல்களில் ஒன்றான இப்பாடலின் காட்சி அமைப்பை பார்க்கும் போது
இப்பாடல் ஐரோப்பாவின் மூன்று இடங்களிலும் தமிழ் நாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக இப்பாடலின் தொடக்கம் கொலண்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்பூந்தோட்டம் ஏற்கனவே சங்கரின் மோ சுகுமாரி பாடலுக்கு பயன் படுத்தப்பட்ட தோட்டம் ஆகும். அதில் அழகாக இப்பாடலின் தொடக்கம் படமாக்கப்பட்டுள்ளது.
சங்கரின் கண்ணாடி செட்கள் இப்பாடலின் அடுத்த சரணத்துக்கு படமாக்கப்பட்டுள்ளது. ஒரு கூடை சன் லைட் மற்றும் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல்களை போல் அழகான லோகேசனில் முதலாவது சரணம் படமாக்கப்பட்டுள்ளது.
அடுத்த சரணம் ஐரோப்பாவின் தாவரவியல் பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளது. இது சகாரா பூக்கள் பாடலை போல் அமைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தொடக்கமானது அந்நியன் அன்டன் காக்கா பாடலை போல ரயிலுக்கு கலர் அடித்து அழகாக படமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மிகவும் கஷ்டப்பட்டு மிக அழகான பாடலை படமாக்கியுள்ளார் சங்கர்.
சங்கரின் பிரமாண்டத்திற்கு நிகர் சங்கரே.
சங்கரின் பிரமாண்டத்திற்கு நிகர் சங்கரே.