Published On: Wednesday, January 18, 2012
ஹிறா நகர் மாதிரிக் கிராமம் சம்பந்தமான கலந்துரையாடல்
(நிஸார் ஜமால்தீன்)
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் முயற்சியின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை ஹிறா நகர் முன்மாதிரிக் கிராமமாக அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான அம்பாரை மாவட்ட திணைக்களத் தலைவர்களுடனான ஒன்று கூடல் 2012.01.16 ஆம் திகதி கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இம்மாதிரிக் கிராமத்திற்கு 35 வீடுகள், 5 பொதுக் கிணறுகள், 35 தனிப்பட்ட கிணறுகள், வீதிகள், மின்சாரம், பொதுக்கட்டடங்கள், மலசல கூடங்கள், பாடசாலை கட்டடம், சுகாதார நிலையம், வாழ்வாதாரம் போன்றவை அமைக்கப்படவுள்ளன.
இக்கூட்டத்திற்கு அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, கட்டடத் திணைக்கள பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், அம்பாரை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்; எஸ். அபூசாலி, நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட மேலதிக பிராந்திய பணிப்பாளர் எஸ்.எல்.எம். அலியார், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜீ. ரஷீட் முஹம்மட், இலங்கை மின்சார சபையின் கல்முனை மின்பொறியியலாளர் கே.எல். உவைஸ், அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாஹீம், அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் ஐ.எல். ஹைதர் அலி உட்பட அம்பாரை மாவட்டத்தின் பல முக்கிய திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் முதல் முன்மாதிரிக் கிராமமாக இக்கிராமம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.