Published On: Tuesday, January 17, 2012
உள்ளூராட்சி மன்ற, உள்ளுராட்சி தேர்தல் சட்டமூலங்கள் இன்று சமர்ப்பிக்கப்படாது

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் சட்ட மூலங்களை இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அரசாங்க உறுப்பினர்கள் குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சட்ட மூலங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் யோசனைகளை சமர்ப்பித்துள்ள நிலையில், அவற்றையும் பரிசீலிக்கும் பொருட்டு, இந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பிலான சட்ட மூலம் திட்டமிட்டபடி, நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.