Published On: Wednesday, January 25, 2012
கடாபி ஆதரவாளர்கள் வாலித் நகரைக் கைப்பற்றினர்

மூன்று மாதங்களுக்குப் பின், கடாபி ஆதரவாளர்கள், பானி வாலித் நகரைக் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் அரசு அவசர நிலை பிறப்பித்துள்ளது. லிபியாவில் கடந்த ஆண்டு நவம்பரில், அப்போதைய தலைவர் கடாபி கொல்லப்பட்டார். இதையடுத்து புதிய அரசு அமைந்தது. இந்நிலையில் தலைநகர் திரிபோலியில் இருந்து 140 கி.மீ. தெற்கில் உள்ள பானி வாலித் நகரை நேற்று மீண்டும் கடாபி ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.
அந்நகரில் இருந்த புரட்சிப் படைத்தளபதி அலி அல் படாம்னி, மிஸ்ரட்டா நகருக்குத் தப்பித்துச் சென்றார். நகரின் பல உயர்ந்த கட்டடங்களில், கடாபி ஆட்சியில் இருந்த பச்சைக் கொடியை அவரது ஆதரவாளர்கள் நேற்று ஏற்றி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அப்பகுதியில் அரசு அவசர நிலை பிறப்பித்துள்ளது.