Published On: Wednesday, January 25, 2012
புத்தளத்தில் 5 வயது சிறுவனின் அபார ஞாபகசக்தி
புத்தளம் மாவட்ட கிராமமான எலுவன்குளத்தில் 5 வயதுடைய சிறுவன் தனது ஞாபக சக்தியினூடாக மக்களை வியக்க வைக்கின்றான். எப். சகாவுல்லா எனும் இச்சிறுவன் 150க்கும் மேற்பட்ட நாடுகளினது தேசிய கொடியினை அடையாளம் காட்டி அவை எந்த நாட்டுக்குரியது என கூறிவருகின்றான். அத்துடன் 100க்கும் மேற்பட்ட நாடுகளினது தலைவர்களினை அடையாளம் காட்டுவதுடன் அவர்களினது பெயர்களினையும் கூறும் அதேவேளை 100க்கும் மேற்பட்ட நாடுகளினது தலை நகரினது பெயர்களினையும் கூறி மக்களினை ஆச்சரியப்பட வைக்கின்றான்.

முஹம்மது பவ்மி - பாத்திமா சன்பரா ஆகியோரின் புதல்வாரன சகாவுல்லா 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி பிறந்துள்ளார். அவர் புத்தளம் இக்ரா சர்வதேச பாடசாலையில் ஆரம்ப பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.
தனக்கு இவ்வாறான ஞாபக சக்தியினை வழங்கிய அல்லாஹ்வுக்கு தான் நன்றி கூறுவதாகவும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினை நேரடியாக சந்திக்க விரும்புவதாகவும் சிறுவன் எப்.சகாவுல்லா தெரிவித்தான். இச்சிறுவன் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த கலை நிகழ்வின்போது மேடையில் மக்கள் முன் இதனை நிரூபித்து காட்டியதாக பாடசாலை அதிபர் ஏ.எஸ். பிரதீஸ் தெரிவித்தார்.