Published On: Thursday, January 12, 2012
பரீட்சைப் பெறுபேறு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் மாவட்ட ரீதியான முடிவுகள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றி ஆராய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அதன் அறிக்கையை அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியிடம் கையளித்தது. இக்குழுவின் தலைவியூம் தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின செயலாளருமான தாரா விஜேதிலக்க இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாகவும் மாவட்ட தரப்படுத்தல் தொடர்பாகவும் எழுந்த பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதியால் கடந்த மாதம் 29ஆம் திகதி இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இதற்கமைய உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான பிரச்சினை களை ஆராய்ந்த குழு தமது பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளது.
ஜனாதிபதியின் செயற்பாட்டுச் சபையின் தலைவர் காமினி செனரத் உட்பட விசாரணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.