Published On: Tuesday, January 31, 2012
தாதி உத்தியோகத்திர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் தாதி உத்தியோகத்தர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. தாதி உத்தியோகத்தர்களின் நாடுதழுவிய கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.
தாதிய உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். அன்வர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 14 அம்சங்களைக் கொண்ட கோரிக்கைகளை பதாதைகளுடன் ஏந்திய வண்ணம் தாதி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சீருடைக் கொடுப்பனவை அதிகரி, விஷேட பிரிவுகளுக்கான கொடுப்பனவை அதிகரி, பதவி உயர்வுகளை முன்பிருந்தவாறு அமுல்படுத்து, 2011ஆம் ஆண்டின் இடமாற்றத்தை அமுல்படுத்து, பராமெடிக்கல் சேவையிலுள்ளவர்களைப் போன்று தாதிய பதவி உயர்வுகளை அமுல்படுத்து, தரம் 1க்கான பதவி உயர்வு நிலுவையை 1988 இலிருந்து வழங்கு, வைத்தியர்களுக்கு வழங்கும் தொலைபேசிக் கொடுப்பனவை எமக்கும் வழங்கு, மேலதிக நேரக் கொடுப்பனவை 180க்கு 1ஆக மாற்று, விஷேட கொடுப்பனவுக்கான் தடையை நீக்க தாதிய உயர் பதவிகளுக்கான சலுகை வாகன அனுமதியை வழங்கு, பதவி உயர்வின் போது விஷேட தகுதியை கவனத்திற் கொள், 2009இன் 19ஆவது சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடையை நீக்க என்ற வாசகங்கள் பதாதைகளில் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.