Published On: Tuesday, January 31, 2012
பதிவுசெய்யப்படாத பயிற்சி மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை
(முஹம்மட் பிறவ்ஸ்)
சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸ் பதிவு இல்லாமல் நாட்டில் கடமையாற்றும் பயிற்சி மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் பொலிஸார் நடத்திய ஒரு கணக்கெடுப்பில் நாட்டில் 40,000 பயிற்சி மருத்துவர்கள் இலங்கை மருத்துவ கவுன்சில், ஆயுர்வேதம் குழுவில் பதிவு செய்யாமல் இருந்தனர் என்று அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (GMOA) தலைவர், டாக்டர் அநுராத பதனிய தெரிவித்தார்.
தற்போதுள்ள சட்டங்களின் படி, ஒரு மருத்துவ கவுன்சில் இணைந்து பதிவுசெய்யப்படாத மருத்துவர் பயிற்சியின்போது சிறு அபராதத்தை செலுத்தி கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கொள்கின்றனர். இருப்பினும், இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு பதிவுசெய்யப்படாத பயிற்சி மருத்துவர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டுமென டாக்டர் அநுராத மேலும் தெரிவித்தார்.