Published On: Friday, January 13, 2012
டெங்கு நோயின் தாக்கத்தி லிருந்து மக்களை பாதுகாக்கும் ஆலோசனைக் கூட்டம்
வேகமாக பரவிவரும் டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் எதிர்வரும் 16ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரைக்கும் தேசிய ரீதியில் ‘நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன
இத்திட்டத்தினை சம்மாந்துறை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று(13) காலை சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எம்.எப்.இஸ்ஸானா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, தலைமை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக், பிரதேச சபையின் செயலாளர் சலீம் உட்பட சகல திணைக்களங்களையும் பிரதிநிதிதிதுவப்படுத்தும் பிரதிநிதிகள்,பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்