Published On: Tuesday, January 17, 2012
‘கோச்சடையான்’ படப்பிடிப்பு எதிர்வரும் 19ம் திகதி தொடங்குகிறது

ரஜினி நடிக்கும் ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு எதிர்வரும் 19ம் திகதி தொடங்குவதால் ரஜினியுடன் சினேகா நடிக்கும் காட்சிகளை சௌந்தர்யா படமாக்க உள்ளார்.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த ‘ராணா’ படப்பிடிப்பு அவரது உடல்நிலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் இதில் அதிக எடையுடன் கூடிய உடை அணிதல் மற்றும் கத்தி சண்டை போன்ற கடினமான காட்சிகள் நிறைய இருந்ததால் அக்காட்சிகளில் நடிக்க கால அவகாசம் தேவைப்பட்டதால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போய் இருந்தது.
இந்நிலையில் மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி. இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று முடிவு செய்யப்படாமல் இருந்தது.
மேலும் சமீபத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், கோச்சடையான் படப்பிடிப்பில் அடுத்த மாதம் பங்கேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது உடல்நிலை முழுமையாக தேறியதை தொடர்ந்து படப்பிடிப்பினை உடனே வைத்துக்கொள்ள ரஜினி சம்மதித்துள்ளார்.
மேலும் இதையடுத்து எதிர்வரும் 19ம் திகதி ஏவி.எம். படப்பிடிப்பு அரங்கத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
ரஜினியின் தங்கையாக நடிக்கும் சினேகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இப்படத்தில் ஆதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் மிருகம், ஈரம் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆவார்.