எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, January 17, 2012

சிப்பியினுள் முத்து உருவாகும் விந்தை

Print Friendly and PDF


கடலில் காணப்படும் முத்துச் சிப்பியினுள் சிறிய திண்மப் பொருளொன்று புகுந்து கொண்டால் உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்காகிய எப்பிதீலியம் (Epithelum)  என்னும் படலத்தால் அதை நன்கு பொதிகின்றது. நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திரவம் மெல்லிய அடுக்குகளாக அதன் மீது படிந்து உலகமாந்தர் அனைவரும் அதிகம் விரும்பும் முத்தாகப் பரிணமிக்கின்றது.

முத்தில் காணப்படும் பிரதான மூலகங்களாவன ஆர்கனைட்டு, காண்கியோலின், நீர் என்பனவாகும். முத்து உருவாகும் போது மெல்லிய அடுக்குகள் பொதியப்படுவதினால் அது ஒளியை உட்பிரவேசிக்கவும் (Transparent)  பிரதிபலிக்கவும் (Reflection) ஏற்ற தன்மையுடைய தாகக் காணப்படுகின்றது. இதனால் சாதாரண முத்துக்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் பிரகாசமாகவும் ரம்மியமாகவும் தோன்றுகின்றன.

இவ்வுலகில் கறுப்பு நிறமான முத்துக்களும் மிக அருமையாகக் காணப்படுகின்றன. இவ்வகையான முத்துக்களுக்கு கேள்வி அதிகம். முட்டை வடிவிலான முத்துக்கள் பொதுவாகத் தென்பட்டாலும் உருண்டையான தோற்றமுடைய முத்துக்களுக்கே  (Pearls)  மதிப்பு அதிகம். தூசி, மிதமிஞ்சிய உஷ்ணம், ஈரலிப்புத்தன்மை போன்றவற்றினால் முத்து பழுதுறும் வாய்ப்பு ஏற்படலாம்.

அவிகுலிடி சிப்பிகளிலும் யூனியனி என்றும் மட்டிகளில் உற்பத்தியாகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள். செயற்கை முத்துக்கள் சிப்பியின் உட்புறம் முத்துப்போல் அழகான மெல்லிய பொருள் ஒன்றினால் மூடியிருக்கும். இதை நெக்கர் என்பர். அந்த நெக்கரினால் உருவாக்கிய மணியை உயிருள்ள முத்துச் சிப்பியின் திசுவிற்கும் சிப்பிக்குமிடையே கவனமாக திணிப்பார்கள்.

அவ்வாறு திணிக்கப்பட்ட சிப்பிகளை கூண்டு ஒன்றினுள் வைத்து நீரில் பாதுகாப்பாக அமிழ்த்திவிடுவார் கள். நாளடைவில் மணிகள் பொதிக்கப் பட்டு முத்துக்கள் உருவாகும். தோற்றத் தில் பெரிய முத்துக்கள் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் முத்துக்கள் செயற்கை முத்துக்கள் எனப்படும். இந்த அரிய முறையை ஜப்பானியர் ஒருவர் 1804 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார். முத்துக்களின் தரத்தை எக்ஸ்-கதிர் எண்டாஸ் கோப் (Endoscope) என்னும் கருவியினூடாகவும் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

சில வகை மீன்களின் செதில்களைக் கொண்டு முத்துச்சாறு (Pearlessence) உற்பத்தி செய்யப்படுகின்றது. அதை ஊன் பசையுடன் கலந்து கண்ணாடி மணிகள் மீது அவற்றைப் பூசி முத்துக் கள் தயாரிக்கின்றனர். முத்துக்களின் நிறை கூடக் காணப்படுவதற்காக சில தொழில்நுட்ப யுக்திகளும் பயன்படுத் தப்படுகின்றன.

முத்துக்குளிக்கும் இடங்கள் உலகில் மிகச் சிலவேயுள்ளன. பாலத்தீன் வளை குடாவில் உள்ள பஹ்ரைன் இலங்கை யில் உள்ள சிலாபம் மற்றும் மன்னார் வளைகுடா இந்தியாவில் உள்ள தூத் துக்குடி, ஜப்பானில் உள்ள டோக்கியோ கடல், குலூத்தீவுகள் அமைந்துள்ள கடல் பிரதேசம் அவுஸ்திரேலியாவின் வடக்கு மேற்குக் கரையோரங்கள், கலிபோர்னியாக் கடல் என்பனவே அவை எனலாம்.

நம் நாட்டைப் பொறுத்தவரை உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் இரு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட திணைக்களத் தின் முன் அனுமதியுடன் முத்துக் குளிக்கும் பணியில் ஈடுபட வாய்ப்புக்கள் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை முத்துக் குளித்தல் அரசாங்கத்திற்குச் சொந்தமான பண்ணைகள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. முத்துக் குளிக்கும் போது பெறப்படும் சிப்பிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதமானவை அரசாங்கத்திடம் கையளித்தல் வேண்டும்.

முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும். வருடத்தில் எல்லா மாதங்களிலும் முத்துக் குளித்தல் நடைபெறுவதில்லை. மார்ச் திங்களே இதற்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது. சுமார் இருபது மீற்றர் ஆழமுள்ள கடல்படுக்கையில் காணப்படும் சிப்பிகளைச் சேகரிக்க வேண்டும். எண்பது முதல் தொண்ணூறு செக்கினில் இது பெறப்பட வேண்டும். மூச்சை அடக்கவும் தன் மீது அழுத்தும் கடல் நீரின் கனத்தைக் தாங்கக் கூடியவராகவும் இருத்தல் அவசியம். புதிதாக இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு மூக்கிலும், காதிலிருந்தும் இரத்தம் கசிவது தவிர்க்க முடியாததொன்றாகும்.

மேலும் இவர்கள் மனிதனை விழுக்கக் கூடிய பெரிய சுறா மீன்கள் அண்மிக்கும் வேளையில் சமயோசிதமாக தப்பிக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதற்கு அவர்கள் கூரிய கருங்காலித் தடிகளைத் தம்வசம் வைத்துக் கொள்வர். முத்துக் குளிக்கும் ஒருவர் தவறுதலாக அதிக நேரம் கடலினுள் தங்கிவிட்டால் மூச்சுத் திணறி இறக்கவும் நேரிடும். இப்பணியில் ஈடுபடுபவர்கள் உடல் வலிமையையும், அகன்ற மார்பும் கறுத்த நிறமுடையவராக இருத்தல் வேண்டும். இது பழைய முறை.

மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய நவீன யுகத்தில் நீரினுட் சுவாசிக்கக் கூடியதாக பிராணயுவா (Oxygen)  வாயு நிரப்பப்பட்ட சிறிய சிலிண்டர்களையும் தலைக் கவசத்தை யும் அணிந்த பின்பு கடலினுள் இறங்குவார்கள். சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள்.

நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக் களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாக அவதானித்துக் கொண்டிருப்பார்கள்.

மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துக் குளிக்கக் குதித்துவிடுவார். முத்துக் குளிக்கும் பணி முடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில் எடுப்பார்கள்.

முத்தைப் பொறுத்தவரை அதற்கு எந்தக் காலத்திலும் பெருமதிப்பு இருக்கத்தான் செய்கிறது. பாண்டி நாட்டு மன்னர் தனது அரசிக்கு விலைமதிப்புள்ள முத்துக்கள் பதியப்பட்ட தங்க ஆபரணங்களைப் பரிசாக அளித்தார் என்பதை சரித்திர வாயிலாக அறிய முடிகின்றது. முத்துகள் பண்டைய காலம் தொட்டு இன்று வரை பலராலும் பயன்படுத்தப்படுகிறது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452