Published On: Monday, January 30, 2012
35 மில்லியன் நிதியில் பொத்துவில் செம்மணிக்குளம் அபிவிருத்தி
(நிஸார் ஜமால்தீன்)
பொத்துவில் செம்மணிக்குளத்தினை 35 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனர்நிர்மாணம் செய்வது தொடர்பாக கிழக்கு மாகாண பதில் முதலமைச்சரும் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
இக்குளம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இக்குளத்தினை விரைவாக புனர்நிர்மாணம் செய்வதன் மூலம் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயக் காணிகள் நன்மை அடைய முடியும் என பதில் அமைச்சருடன் கலந்துரையாடிய விவசாய மக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேராசியர் எஸ்.எஸ்.திலகசிறி, நீர்ப்பாசன பொறியியலாளர்களான எச்.ஆர்.மதுரங்க, சுஜீதரன், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் யு.எல்.ஏ.நசார், அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச்செயலாளர் ஏ.பதுர்கான் உட்பட உயர் அதிகாரிகளும் விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.