Published On: Tuesday, January 31, 2012
கவர்ச்சி, ஆபாசம் தெரியும்- சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் நடித்துள்ள படம், ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’. இதை எஸ்.ஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், புன்னகைப்பூ கீதா தயாரித்து, நடித்துள்ளார். எவ்வளவு சோதனைகளைக் கடந்து, ஒரு பெண் ஹீரோயினாக மாறுகிறாள் என்பது கதை. படத்தைப் பார்த்த சென்சார் குழு, யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
சோனியா அகர்வால் கேரக்டர் பரபரப்பாக விவாதிக்கப்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், திரையுலகினர் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் வரும் என்று தெரிகிறது. இதுகுறித்து கீதா கூறியதாவது: எந்தவொரு தொழி லிலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அதுபோலத்தான் சினிமா உலகிலும் நல்லதும், கெட்டதும் சேர்ந்தே இருக்கும். இப்படத்தில் அதைத்தான் பதிவு செய்திருக்கிறோம். இதற்குமுன் எனது தயாரிப்பில் வந்த ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘குண்டக்க மண்டக்க’, ‘நர்த்தகி’ படங்களில், தவறான கருத்துகளைப் பதிவு செய்யவில்லை. நானும் பெண் என்பதால், கவர்ச்சியின் எல்லை எது? ஆபாசம் எது என்று தெரியும். அதைமீறி படம் தயாரிக்க மாட்டேன். இந்த வருடத்தில் மேலும் 3 படங்கள் தயாரிக்க உள்ளேன்.