Published On: Tuesday, January 31, 2012
பிரகாஷ்ராஜின் ' தோனி ' இசை வெளியீடு

பிரகாஷ்ராஜ் இயக்கி தயாரித்து வெளிவரவிருக்கும் படம் தோனி. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை (ஜன.28) நடைபெற்றது.
' தோனி ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்து கொண்டு விழா மேடையில் படத்தின் பாடல்களை தனது குழுவினருடன் பாடல்களை LIVE ஆக பாட இருப்பதாக அறிவித்தது படக்குழு.
இது ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால், இளையராஜா எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிலும் ரசிகர்களின் முன்னிலையில் மேடையில் LIVEஆக பாடியது இல்லை. முதன் முறையாக ' தோனி ' படத்திற்காக பாடினார்.
கிரிக்கெட்டில் தோனியை போல ஆக வேண்டும் என்ற முயற்சியை கொண்டுள்ள சிறுவன், தன்னுடைய லட்சியத்தை அடைந்தானா என்பதே இப்படத்தின் கதை.
இசை வெளியீட்டு விழாவில் ' தாவித் தாவி ' என்ற பாடலை இளையராஜா பாடி முடிக்கும் போது அரங்கம் கைதட்டல்களால் நிறைந்தது.
படத்தில் இடம்பெரும் ஒரு பாடலில் பிரகாஷ்ராஜ்-பிரபு தேவா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
கே.பாலசந்தர், பாலு மகேந்திரா, இயக்குனர் மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார், நாசர், நா.முத்துகுமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டவர்கள் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பிரகாஷ்ராஜ் ஆகியோரை பாராட்டிப் பேசினர்.
படத்தின் ஒரு காட்சியை பின்னணி இசையில்லாமல் திரையிட்டு காட்டிவிட்டு, பின்னர் இளையராஜா அக்காட்சிக்கு பின்னணி இசை எப்படி அமைத்து இருக்கிறார் என்பதை திரையிட்டு காட்டியது அனைவரையும் கவர்ந்தது.
' தோனி ' விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.