Published On: Monday, January 30, 2012
'தானே' புயல்; சிவகுமார் குடும்பம் நிவாரண உதவி

தமிழ் திரையுலக நடிகர் சிவகுமாரின் குடும்பம் தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர்.
பிரபல நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களும் முன்னணி நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கினர்.
தலைமைச் செயலகத்தில் நேற்று(28.1.2012) இந்த நிதியை சிவகுமார் குடும்பத்தினர் நேரில் வழங்கினர்.
தானே புயல் பாதித்த கடலூர் மற்றும் விழுப்புரம் மக்களின் துயர் துடைக்க அனைத்து தரப்பினரும் பெரும் நிதி உதவியை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கி வருகின்றனர். இதுவரை ரூ.53 கோடி அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் பலர் மனமார உதவி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகுமார் குடும்பமும் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர் என்று குறிப்பிட்டுள்ளது.