எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, January 30, 2012

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்படுகிறார்

Print Friendly and PDF


டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக சேவக் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது. 

முதலில் கேப்டன் மாற்றப்பட உள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் சேவக் இடையிலான "ஈகோ' பிரச்னைக்கு முடிவு காணலாம். கேப்டன் என்ற முறையில் தன்னால் சேவக்கை கட்டுப்படுத்த இயலவில்லை என தோனி புலம்புகிறார். துவக்க வீரராக பொறுப்பாக "பேட்' செய்யவில்லை என புகார் கூறுகிறார். மறுபக்கம் தோனியின் கேப்டன் உத்திகளை ஏற்க மறுக்கிறார் சேவக். வீரர்கள் தேர்வு, "பீல்டிங்' வியூகம் போன்றவற்றில் தோனி தவறு செய்வதாக குறிப்பிடுகிறார். துணை கேப்டன் என்ற முறையில் தன்னிடம் கலந்து ஆலோசிப்பது இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார். இவர்களது மோதல், அணியில் பிளவை ஏற்படுத்துகிறது. 

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்து 2013ல் ஓய்வு பெறப் போவதாக தோனி தன்னிசயாக அறிவித்தது தேர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, 2013ல் நடக்க வேண்டிய விஷயம் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை,''என்றார்.

தோனிக்கு பாடம் புகட்டும் வகையில், அவரை டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்க, பி.சி.சி.ஐ, முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. புதிய கேப்டனாக சேவக் நியமிக்கப்படலாம். தவிர, டிராவிட், லட்சுமண் ஆகியோரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் தேர்வாளர்கள் கருதுகின்றனர். எனவே, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, சத்தேஷ்வர் புஜாரா போன்ற இளம் வீரர்களை சேர்க்க முடிவு செய்துள்ளனர். யுவராஜ் உடல்நலம் தேறும்பட்சத்தில் அவருக்கும் டெஸ்டில் வாய்ப்பு தரப்படும்.

கேப்டன் மாற்றம் மட்டும் சாதிக்க உதவாது. ஏனென்றால், தோனிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அடிலெய்டு டெஸ்டில் கேப்டன் பொறுப்பை ஏற்ற சேவக், அணிக்கு வெற்றி தேடித் தர முடியவில்லை. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைத்தல், இளம் ரத்தம் பாய்ச்சும் வகையில் பாரபட்சமற்ற வீரர்கள் தேர்வு மற்றும் இந்திய கிரிக்கெட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தினால் தான், அன்னிய மண்ணில் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.

ரவி சாஸ்திரி தாக்கு:
டெஸ்ட் தொடரில் இந்திய அணி சந்தித்த தோல்வி பற்றி ஆஸ்திரேலிய "மீடியா' கடுமையாக விமர்சித்துள்ளது. இதே போல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியும் சாடியுள்ளார். இவர் கூறுகையில்,""இந்திய வீரர்களுக்கு எப்படி "பேட்' செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. "ஆப்- ஸ்டம்புக்கு' வெளியே சென்ற பந்துகளை வீணாக அடித்து அவுட்டாகினர். டிராவிட், லட்சுமணுக்கு "ஆப்-ஸ்டம்பு' எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. பேட்ஸ்மேன்களின் "புட்வொர்க்கும்' மோசமாக இருந்ததால், தோல்வியை தவிர்க்க முடியவில்லை,''என்றார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452