Published On: Monday, January 23, 2012
மன்னாரில் 'திவிநெகும' வாழ்வெழுச்சி கண்காட்சியின்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
மன்னார் மாவட்டத்தின் 'திவிநெகும' வாழ்வெழுச்சி கண்காட்சியின் 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கண்டுகழிக்க வருகைத் தந்தனர். சனிக்கிழமை ஆரம்பமான இக்கண்காட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றது.
இவ்விரு தினங்களிலும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியினை பார்வையிட வருகைத் தந்ததாக கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் சென்சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் 40 மேற்பட்ட நிறுவனங்கள் தமது காட்சிக் கூடங்களை அமைத்திருந்தனை.
2ஆவது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை இக்கண்காட்சியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார். வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜய லட்சுமி, வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.