Published On: Monday, January 23, 2012
வறியவர்களுக்கு ‘திவிநெகும’ நிதியிலிருந்து கறவைப் பசு வழங்கும் வைபவம்
(நிஸார் ஜமால்தீன்)
மகிந்த சிந்தனையின் மூலம் ‘திவிநெகும’ நிதியில் 1.8 மில்லியன் நிதி மூலம் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆலிம்சேனை, செங்கனிச்சீமை, பட்டியடிப்பிட்டி போன்ற பின்தங்கிய ஏழை மக்களுகான கறவைப் பசு வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று பிரதேச செயலாளரும் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளருமான எம்.வை. சலீம் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேசசபை வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, கிழக்கு மாகாண பதில் முதலமைச்சரும், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. றாசிக், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் எம்.எம். றிசாம், அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.