Published On: Friday, January 06, 2012
இளைஞர் சேவை அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கல்

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் துமிந்ந திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் .தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா, மன்றத்தின் பணிப்பாளர்கள், பணிப்பாளர்சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். வடக்கு, கிழக்குப் பகுதியில் இருந்து தமிழ், முஸ்லிம் அதிகாரிகள் 12 பேர் நியமனம் பெற்றமை இங்கு விசேட அம்சமாகும்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வழங்கப்படும் நியமனம்தான் அதிகூடிய நியமனம் என்று மன்றத்தின் தலைவர் குறிப்பிட்டார். நியமனம் பெற்ற 90 பேருக்கும் எதிர்வரும் 09-12 ஆம் திகதி வரை இலங்கை மன்றக் கல்லூரில் பயிற்சி செயலமர்வு இடம்பெறும்.











