Published On: Saturday, January 14, 2012
டேவிட் வார்னர் அதிரடி சதம் : வலுவான நிலையில் அவுஸ்திரேலியா

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 69 பந்துகளில் அதிரடி சதம் எடுத்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலியா விக்கெட் இழ்ப்பின்றி 149 ரன்கள் எடுத்துள்ளது. 23 ஓவர்களில் இந்த ரன்களை எடுத்ததன் மூலம் ஓவருக்கு 6.47 ரன்கள் ரன் விகிதம் வைத்துள்ளது.
துடுப்பாட்டத்தில் எந்த ஒரு வீரரிடமும் 'அப்பிளிகேஷன்' இல்லை. கவுதம் கம்பீர் 31 ரன்கள் வரை நன்றாக விளையாடினார். மேலே செல்வார் என்று எதிர்பார்த்தால் பெவிலியன் சென்றார்.
சேவாக் தனது வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுப்பது நல்லது. அவரை பின்னால் களமிறங்கச் செய்து துவக்க வீரராக ரஹானே போன்றவர்களை முயன்று பார்க்கலாம்.
டிராவிட், லஷ்மண் ஆகியோரில் ஒருவரை நீக்கி விட்டு ரோஹித் ஷர்மாவை முயன்று பார்க்கவேண்டும். கோலி டவுன் ஆர்டரில் சேவாக் களமிறங்குவது நல்லது என்றே தோன்றுகிறது
கோலி இன்று சிறப்பாகவே ஆடினார். களத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பூதம் ஒன்றும் இல்லை. துடுப்பெடுத்தாட சுலபமாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் மெல்பர்ன் ஆட்டக்களத்தை விடவும் சிட்னி முதல் நாள் ஆட்டக்களத்தை விடவும் இது துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆட்டக்களம் என்றே கூற முடியும்.
சச்சின் டெண்டுல்கர் நன்றாகத் துவங்கினார் அபாரமான அவரடு டிரேட்மார்க் ஸ்ட்ரெய்ட் டிரைவ்களுடன் துவங்கிய அவர் கடைசியில் நேராக வந்த ஹேரிஸ் பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்று பீட் ஆனார் பந்து மட்டையை கடந்து பேடைத் தாக்கியது.
டிராவிட் உண்மையில் அகலமான மட்டை ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. அவர் 9 ரன்கள் எடுத்து மீண்டும் முன்னங்காலை முன் கூட்டியே முன் நகர்த்தி பந்து உள்ளேவரும்போது அதனை எடுக்க முடியாமல் முன்னால் விழுவது போலாகி பவுல்டு ஆனார். சிடில் மீண்டும் டிராவிடை பவுல்டு செய்தார்.
131/4 என்ற நிலையிலிருந்து 161 ரன்களுக்கு இந்தியா சுருண்டது. ஹில்ஃபென் ஹாஸ் மீண்டும் 4 விக்கெட்டுகளைக் கைப்ப்ற்றினார். சிடில் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும் ஹேரிஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.