Published On: Saturday, January 07, 2012
ஆரோக்கியத்துக்கு உதவும் அருமருந்து தயிர்

தயிரின் பல்வேறு உபயோகங்கள் நம் உணவுப் பழக்க வழக்கங்களில் அதை ஒரு தவிர்க்கப்பட முடியாத உணவுப் பொருளாகச் செய்துவிட்டது. தயிரை ஏதோ ஒரு வடிவத்தில் நாம் உபயோகிப்போம். இந்த 'அருமருந்தின்' அதிசய குணங்களால் நாம் ஆரோக்கியம் காப்போம்.
*மஞ்சள் காமாலையின்போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொண்டு வந்தால் மஞ்சள் காமாலை படிப்படியாக குறையும்.
* சொறி மற்றும் சில தோல் வியாதிகளுக்கு மோர் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்தாகும். தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் மோரில் நனைத்த துணி ஒன்றை வைத்து நன்றாக கட்ட வேண்டும்.
இரவில் மட்டும் தொடர்ந்து இந்தக் கட்டுகளை போட்டுக் கொள்ளலாம். கட்டை அவிழ்த்த பிறகு தோலை நன்றாக கழுவிவிட வேண்டும். தோல் வீக்கத்திற்கு இதுபோன்ற கட்டுகள் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.