Published On: Wednesday, January 25, 2012
இந்தி படத்தில் நாயகனாகிறார் 'கொலவெறி' தனுஷ்

மாதவன், கங்கனா ராவத் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம் 'TANU WEDS MANU'. ஆனந்த் ராய் இயக்கிய முதல் இந்தி படம் இது. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழிலும் இப்படத்தினை ரீமேக் செய்ய இருக்கிறார்கள். ஆனந்த் ராய் இயக்க இருக்கும் அடுத்த படமான 'RAANJHNAA' படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். WHY THIS KOLAVERI பாடல் மூலம் இந்தி திரையுலகிலும் பிரபலமான தனுஷ், இந்தியில் நடிக்கும் முதன் படம் இது.
சமீபத்தில் வாரணாசி சென்று திரும்பினார் தனுஷ். சாமி கும்பிட சென்றார் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர் ஆனந்த ராய் உடன் சென்று அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கும் இடங்களை பார்வையிட்டு திரும்பி இருக்கிறார். 'ஆடுகளம்' படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அப்போதே அவரை ஒப்பந்தம் செய்து விட்டாராம் ஆனந்த் ராய். இப்படம் ஒரு அழகான காதல் கதையாம். TANU WEDS MANU படத்தினைப் போலவே இப்படத்தின் கதாபாத்திரங்களும், கதைக்களமும் டெல்லி, பஞ்சாப், சென்னை உள்ளிட்ட இடங்களை சுற்றியே இருக்குமாம்.
தனுஷ் இப்படத்திற்காக இந்தி கற்க இருக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.