Published On: Wednesday, January 25, 2012
இந்தியாவிலிருந்து 56 இலங்கை அகதிகள் நேற்று நாடுதிரும்பினர்
(நமது செய்தியாளர்)
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற தொகையினரில் 56 பேர் நேற்று செவ்வாய்கிழமை விமானம் மூலம் இலங்கை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். நேற்று காலை 11 மணியளவில் இலங்கை வந்த இவர்களை ஜக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனமான யு.என்.எச்.சீ.ஆர். கையேற்றதாக இலங்கை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு வருகைத் தந்தவர்கள் மன்னார், தலைமன்னார், வவுனியா செட்டிக்குளம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதில் 10 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்களும் 28 பெண்களும் ஏனையவர்கள் ஆண்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.