Published On: Monday, January 30, 2012
ரக்கர் போட்டியில் புத்தளம் பொலிஸ் பிரிவு சம்பியன்
(புத்தளம் செய்தியாளர்)
பொலிஸ் திணைக்களத்தினால் பொலிஸ் பிரிவுகளுக்காக நடாத்தப்பட்ட 2011/2012 லெயாட் சவால் கிண்ண ரக்கர் போட்டியில் புத்தளம் பொலிஸ் பிரிவு செம்பியன் தெரிவாகியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இலங்கை பொலிஸ் கல்லூரி, அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, புத்தளம் பொலிஸ் பிரிவு, பொலிஸ் அதிரடிப்படை ஆகிய அணிகள் விளையாடின.

இறுதிப்போட்டி இலங்கை பொலிஸ் கல்லூரி அணிக்கும் புத்தளம் பொலிஸ் பிரிவு அணிக்குமிடையே நடைபெற்றதில் புத்தளம் பொலிஸ் பிரிவு அணி செம்பியன் அணியாக தெரிவாகியது. புத்தளம் பொலிஸ் தொகுதிக்கான பொலிஸ் அத்தியட்சகர் அநுர அபேவிக்ரம, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.பீ.டி. சுகதபால, புத்தளம் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி கே.கே.கே. குணசேகர அணித் தலைவர் புஸ்பகுமார ஆகியோர் வெற்றிபெற்ற அணியுடன் காணப்படுகின்றனர்.