Published On: Monday, January 30, 2012
கல்முனை யார்ட் வீதியில் 15 இலட்சம் ரூபா செலவில் வடிகான்
(எஸ்.எம்.அறூஸ்)
பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரிஸின் முயற்சியினால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மிகப் பிரதானமான யார்ட் வீதியில் சுமார் 15 இலட்சம் ருபா நிதியில் வடிகான் அமைக்கப்பட்டு வருகின்றது. வடிகான் அமைப்பு வேலைகளை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் நிர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் செயலாளர் ஜின்னா, ஆசிரியர் எம்.உவைஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.