Published On: Monday, January 30, 2012
கல்முனை வலயத்தில் ஆசிரியர் மேலதிக நிலுவைக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை
(நமது துருவம் செய்தியாளர்)
கடந்த வருடம் அரசினால் கொண்டுவரப்பட்ட ஆசிரியர்களின் சம்பள சீராக்கம் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான மேலதிக நிலுவைக் கொடுப்பனவு கல்முனை கல்வி வலயத்தில் இதுவரை வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடத்தில் அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல. 28/2010 இன்படி சம்பளங்களை மீளமைத்தல் தொடர்பான திருத்தப்பட்ட சுற்று நிருபம் 2011.07.01ஆம் திகதியன்று நடைமுறைக்கு வந்தது. இதனை ஏனைய கல்வி வலயங்களிலுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளச் சீராக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கான மேலதிக நிலுவைக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்ட போதிலும் கல்முனையில் இதுவரை வழங்கப்படாமை குறித்து ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உரிய அதிகாரிகள் இதுவிடயத்தில் கவனம் செலுத்தி ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர்.